மேர்கண்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ், இலங்கை முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட வாகன குத்தகைத் தீர்வுகளை வழங்குவதற்காக டொயோட்டா லங்கா (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்துடன் ஒரு மூலோபாய கூட்டணியை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது.
இந்த கூட்டணியின் மூலம், புத்தம் புதிய பிராண்ட்-நியூ டொயோட்டா வாகனங்கள் அல்லது 'டொயோட்டா ஷூர்' சான்றிதழ் பெற்ற பயன்படுத்திய வாகனங்களை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள், இப்போது மேர்கண்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் மூலமாக மட்டும் கிடைக்கும் கவர்ச்சிகரமான மற்றும் நெகிழ்வான லீசிங் திட்டங்களைப் பெற முடியும். இந்த முயற்சி வாகன உரிமையை எளிதாகவும், மலிவாகவும், அதிக பலனளிக்கக்கூடியதாகவும் மாற்றும் வகையில் வாடிக்கையாளருக்கு மதிப்பளிக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆறு தசாப்தங்களுக்கும் மேலான நம்பிக்கை மற்றும் நிதிச் சேவைகளில் சிறந்து விளங்கும் மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ், தொழில்துறை தலைவர்களுடன் கூட்டு சேர்வதன் மூலம் வாடிக்கையாளர் வசதிக்கான தனது அர்ப்பணிப்பைத் தொடர்ந்து விரிவுபடுத்துகிறது. டொயோட்டா லங்காவுடனான இந்த புதிய கூட்டணி, தடையற்ற, வெளிப்படையான மற்றும் மதிப்புமிக்க வாகன தீர்வுகளை வழங்குவதற்கான எங்கள் பகிரப்பட்ட தொலைநோக்கு பார்வையை பிரதிபலிக்கிறது.
வாகனத் தொழில்துறை மற்றும் நிதி துறையில் நம்பிக்கைக்குரிய இரண்டு நிறுவனங்களின் ஒத்துழைப்பால், நம்பகமான நிதி தீர்வுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கான எங்கள் அர்ப்பணிப்பை இந்த கூட்டணி உறுதிபடுத்துகிறது.
மெர்கண்டைலின் நம்பகத்தன்மை மற்றும் டொயோட்டாவின் நிலைப்புத்தன்மையுடன் உங்கள் பயணம் இங்கிருந்து தொடங்குகிறது



