மேர்கண்டைல் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் மாவத்தகமவில் அதன் 77வது கிளையை திறக்கின்றது

 

இலங்கை முழுவதும் விஸ்தரித்து வரும் வலையமைப்பின் ஒரு முக்கிய மைல்கல்லாக, எமது 77வது கிளையை இல. 65, கண்டி வீதி, மாவத்தகமவில் திறப்பதை தெரிவிப்பதில் நாம் பெருமையடைகிறோம்.

இந்த மூலோபாய விரிவாக்கம், இலங்கையின் பல பகுதிகளில் உள்ள சமுதாயங்களிடம் நம்பிக்கையும் நேர்மையும் நிறைந்த நிதி தீர்வுகளை மேலும் அருகே கொண்டுச் செல்லும் மேர்கண்டைல் இன்வெஸ்ட்மெண்ட்ஸின் நிலையான உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது. புதிய மாவத்தகம கிளை, குருநாகல் மாவட்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள தனிநபர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் வணிகங்கள் உட்பட வேகமாக வளர்ந்து வரும் வாடிக்கையாளர் தளத்தின் போதுமான தேவைகளைப் பூர்த்தி செய்ய சிறந்த முறையில் நிறுவப்பட்டுள்ளது.

60 ஆண்டுகளுக்கு மேலான நிதி சிறப்பும் நம்பிக்கையும் கொண்ட பாரம்பரியத்துடன், மேர்கண்டைல் இன்வெஸ்ட்மெண்ட்ஸ், ஆயிரக்கணக்கான இலங்கையர்களின் நிதி நலனை உருவாக்கும் ஒரு முன்னணி சக்தியாக இருந்து வருகிறது. எங்கள் கிளை விரிவாக்கம் என்பது வெறும் பௌதீக வளர்ச்சி மட்டுமானதல்ல. தனிப்பயனாக்கப்பட்ட சேவை, வெளிப்படைத்தன்மை மற்றும் வாடிக்கையாளர் முன்னுரிமை மதிப்புகள் மூலம் நாங்கள் வழங்கும் சேவை ஒவ்வொரு சமூகத்தையும் மேம்படுத்துவதற்கும் ஆற்றலளிப்பதற்குமான எமது தீவிரமான வாக்குறுதியைக் வெளிக்காட்டுகிறது.

எங்கள் அனுபவம் வாய்ந்த, நட்பு மனப்பான்மையுள்ள ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் தங்கள் நிதி இலக்குகளை அடைய தேவையான வழிகாட்டுதலையும் ஆதரவையும் வழங்க தயாராக உள்ளனர் - அது ஒரு வணிகத்தை வளர்ப்பது, எதிர்காலத்திற்கான திட்டமிடல் அல்லது செலவுகளை நிர்வகித்தல் போன்ற எதுவாகவும் இருக்கலாம்.

மாவத்தகம மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் யாவரையும், தொழில் வல்லுநர்கள் மற்றும் வணிக உரிமையாளர்களையும் எங்கள் புதிய கிளைக்கு வருகை தருமாறு அன்புடன் அழைப்பததோடு, மேர்கண்டைல் இன்வெஸ்ட்மெண்ட்ஸின் அடையாளமான உயர் சேவை தரத்தை நேரில் வந்து அனுபவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுடன் இணைந்து வளர்ந்துவரும் இந்த பயணத்தில், இலங்கையின் ஒவ்வொரு குடிமக்களுக்கும் நிதி சேவைகளை மேலும் எளிமைபடுத்தியும், தனிப்பயனாக்கியும், வாழ்க்கையில் உணரக்கூடிய தாக்கம் ஏற்படுத்தும் வகையில் வழங்குவது என்ற குறிக்கோளில் நாம் எப்போதும் தெளிவாக உள்ளோம்.

 

 

தொடர்பு
SiteLock