பிரகதி நீடித்த நிலைத்தன்மை வணிகக் கடன் என்பது இலங்கையில் உள்ள தனிநபர்கள், சமூகங்கள், தொழில்முனைவோர் மற்றும் நிறுவனங்களுக்கு சுற்றுச்சூழல் நட்பு, உள்ளடக்கிய மற்றும் உறுதியான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட சிறப்பு நிதி தீர்வாகும். இந்த தயாரிப்பு, காலநிலை நூதனமான விவசாயம், நிலையான மீன்வளம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், பசுமை புதுமை, மற்றும் உள்ளடக்கிய பொருளாதாரச் செயல்பாடுகள் போன்ற முக்கிய துறைகளில் நிதியுதவிக்கான வாசல்களை திறக்கின்றது.
பொருளாதார வலிமைப்படுத்தல், உணவு மற்றும் ஆற்றல் பாதுகாப்பை முன்னேற்றுதல், மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்புணர்வை ஊக்குவித்தல் மூலம் பிரகதி, அனைவருக்கும் பசுமையான, சமமான மற்றும் நீடித்த நிலைத்தன்மை கொண்ட எதிர்காலத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
தகுதிக்கான விதிமுறைகள் :
- 18-60 வயதுக்குட்பட்ட இலங்கை பிரஜைகள்
- தனிநபர்கள், சமூகங்கள், தொழில்முனைவோர் அல்லது பதிவு செய்யப்பட்ட நுன், சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் (MSMEs)
- வணிகச் செயல்பாடுகள் தகுதியான நீடித்த நிலைத்தன்மை வகைகளில் ஏதேனும் ஒன்றின் கீழ் இருத்தல் வேண்டும்.
- கடனைத் திருப்பிச் செலுத்தும் திறன் இருக்க வேண்டும்.
- முன்னுரிமை வழங்கப்படும் தொழில்கள் : இயற்கையைப் பாதுகாக்க அல்லது சமூகத்திற்கு உதவும் வணிகங்கள், பெண்கள் தலைமையிலான வணிகங்கள், இளைஞர் தொழில்முனைவோர் மற்றும் கிராமப்புற மற்றும் பின்தங்கிய சமூகங்கள்.
பொருந்தக்கூடிய பிரிவுகள் :
வகை |
உப-வகைகள் |
1. நிலையான வேளாண்மை |
- பயிர் சாகுபடி
- மேலான்மை நீர் பாசனம்
- கால்நடை வளர்ப்பு
- வேளாண்மை இயந்திரங்கள்
- பிற விவசாய நடவடிக்கைகள்
|
2. நிலையான மீன்வளம் |
- மீன்பிடி மற்றும் நீர்வளம் |
3. புதுப்பிக்கத்தக்க ஆற்றல், ஆற்றல் திறன் மற்றும் நிலையான போக்குவரத்து |
- சூரிய சக்தி தீர்வுகள்
- உயிர்வாயு அமைப்புகள்
- மின்சார வாகனங்கள்
- ஹைப்ரிட் வாகனங்கள்
- பிற நிலையான போக்குவரத்து தேர்வுகள்
|
4. நுண்நிதி மற்றும் நுண், சிறு மற்றும் நடுத்தர நிறுவன உள்ளடக்கம் |
- பெண்கள் முன்னெடுக்கும் தொழில்கள்
- சுயதொழிலுக்கான முச்சக்கர வண்டிகள்
- கிராமப்புற தொழில்முனைவோர்
- இளைஞர் தொடக்க நிறுவனங்கள்
- பிற நுண் மற்றும் சார் சிறு நிறுவனங்கள்
|
5. சுற்றுச்சூழல் தொழில்கள் மற்றும் பசுமை தொடக்கங்கள் |
- சுற்றுச் சூழல் நலத் தொழில்கள்
- பசுமை முயற்சிகள்
|
பிரகதி நிலைபேறான வணிகக் கடன் பின்வரும் கிளைகளில் பிரத்தியேகமாக கிடைக்கிறது:
-
பலாங்கொடை
-
பெந்தோட்டை
-
சிலாபம்
-
எம்பிலிபிட்டிய
-
ஹொரணை
-
கடுவெல
-
கொட்டாவ
-
குருநாகல
-
மொரட்டுவ
-
பொலன்னறுவை
-
இரத்தினபுரி
-
தம்புதேகம
-
திஸ்ஸமஹாராம